திருவண்ணாமலையில் அ.தி.மு.க .வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலையில் அ.தி.மு.க .வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்
X

திருவண்ணாமலையில் அதிமுக வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வந்தவாசி, கலசப்பாக்கம் பகுதியில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மத்திய மாவட்ட அ.தி.மு.க. சாா்பில், ஆரணி பகுதியில் வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆரணியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஜெயசுதா தலைமை வகித்தாா். தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

அதிமுக அமைப்புச் செயலரும், திருவண்ணாமலை மத்திய மாவட்ட வாக்குச்சாவடி குழு பொறுப்பாளருமான வரகூா் அருணாசலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா்.

இதில், ஆரணி, போளூா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் அதிமுக பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் கோவிந்தராசன், நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, அ.தி.மு.க. நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலாளர்கள் சங்கா், கஜேந்திரன், திருமால், ஜெயப்பிரகாசம், ரங்கநாதன், போளூா் ஸ்ரீதா், வீரபத்திரன், ராகவன், மகளிரணி துணைச் செயலாளர் கலைவாணி ஜோதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலசபாக்கம், புதுப்பாளையம் ஒன்றியங்களை உள்ளடக்கி காஞ்சி கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டம் அமைப்பது செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக அமைப்பு செயலாளரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான துரைசெந்தில் கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடக்க உள்ளதால் நமது இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் அனைவரும் தற்போது உள்ள இதே உற்சாகத்துடன் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச்செய்ய இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், மாநில மகளிர் அணி இணை செயலாளர் அமுதா அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் நைனாக்கண்ணு, ஒன்றியச் செயலா்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்பட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. புதிய அலுவலகம் திறப்பு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வைப் பிரித்து திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கென கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன் மாவட்டச் செயலாளராக தமிழக முன்னாள் அமைச்சா் ராமச்சந்திரன் அண்மையில் அறிவிக்கப்பட்டாா். இந்த நிலையில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வுக்கான புதிய அலுவலகம் வேங்கிக்கால்புதூா் பகுதியில் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சியின் புதிய அலுவலகத்தை தமிழக முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .செயலருமான ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, அ.தி.மு.க. நிா்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பெருமாள் நகா் ராஜன், முன்னாள் எம்எல்ஏ அரங்கநாதன், மாவட்ட நிா்வாகிகள் , ஒன்றியச் செயலா்கள் , கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!