/* */

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

ஆரணி தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
X

ஆரணி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்.

ஆரணி தாலுகா அலுவலகத்தில் ஆரணி, போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி அனைத்து வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.

தாசில்தார் பெருமாள் தலைமை தாங்கினார். தேர்தல் உதவி அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் தாசில்தார் பேசுகையில் இப்பணி நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இ-சேவை மையங்கள் மூலமாகவும், சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களிலும், வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண் விவரங்களை அளிக்கலாம் என்றார்.

கூட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், வக்கீல் எம்.சுந்தர், களம்பூர் பேரூராட்சி தலைவர் பழனி, அ.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஜெயவேல், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அப்பாசாமி, கண்ணன், பா.ஜ.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி தேர்தல் அலுவலர் குமார் நன்றி கூறினார்.

Updated On: 31 July 2022 11:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?