ஆரணியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

ஆரணியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜி.எஸ்.டி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆரணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிக்கூண்டு அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜி.எஸ்.டி உயர்வு, எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற மாணவர் அணி தலைவர் பொன்னையன், எஸ்.டி.செல்வம், பிரபு, உதயகுமார், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!