ஆரணி நகராட்சியில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு :காலி குடங்களுடன் போராட்டம்

ஆரணி நகராட்சியில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு :காலி குடங்களுடன் போராட்டம்
X

தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் 1 - வது வார்டு பெரியார் நகர், பெரியம்மை தெருவில் 50 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், பொதுமக்கள் ஒருங்கிணைந்து சொந்த செலவில் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்துள்ளனர். இதற்கு, நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால், குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்க நகராட்சி ஊழியர்கள் முயன்றனர். இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து, வரும் 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story
குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி ஈரோட்டில் தொடக்கம்