போளூர் அருகே உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு

போளூர் அருகே உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு
X

போளூர் உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

போளூர் வட்டம் வசூர் கூட்ரோடு வேளாண்மை துறை சார்பில் உள்ள உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வசூர் ஊராட்சியில் இயங்கும் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

வேளாண்மை துறை சார்பில் இயங்கும் இந்த திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் நெல் பயிருக்கு தேவையான அசோஸ்பைரில்லம், கடலை பயிறு மற்றும் இதர பயிர் வகைகளுக்கு தேவையான திரவ உயிர் உரங்கள் பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் ஆகிய திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப் படுகின்றன.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பிரதாப், வேளாண்மை துணை இயக்குனர் குணசேகரன் ,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி , மத்திய அரசின் திட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, திரவ உயிர் உர வேளாண்மை அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!