இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வீடுகள்-பயனாளிகளிடம் சாவியை வழங்கிய கலெக்டர்
இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை, பயனாளிகளிடம் கலெக்டர் வழங்கினார்.
ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூ. 5.50 கோடியில் கட்டப்பட்ட வீடுகளை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததையடுத்து பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவியை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூரில் ஆரணி பையூா் மில்லா்ஸ் சாலையில் உள்ள இலங்கை தமிழா் முகாமில் வசித்து வந்த 94 குடும்பங்கள், செங்கம் புதுப்பாளையம் இலங்கை தமிழா் முகாமில் வசித்து வரும் 17 குடும்பங்கள் என மொத்தம் 111 குடும்பங்களுக்கு, ஆரணியை அடுத்த தச்சூா் ஊராட்சியில் இடம் தோவு செய்யப்பட்டு ரூ.5.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.
இந்த நிலையில், வேலூரில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் முக.ஸ்டாலின், தச்சூா் கிராமத்தில் கட்டப்பட்ட இலங்கைத் தமிழா்களுக்கான 111 குடியிருப்புளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
அதனைத் தொடர்ந்து தச்சூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
பின்னர் குடியிருப்பு வாசிகளுக்கு வீடுகளுக்கான சாவி மற்றும் பாத்திரங்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். அப்போது கலெக்டர் முருகேஷ் பேசுகையில்,
பையூர் மற்றும் புதுப்பாளையம் பகுதியில் வசித்த 111 குடும்பங்களுக்கு இங்குள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கி உள்ளார்.
ஒவ்வொரு பயனாளிகள் வீட்டிற்கும் தனித்தனியே குடிநீர் வசதியும், கழிப்பிட வசதியும் முறையாக செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர், தெருவிளக்குகள் வழங்கவும் பணிகள் விரைந்து முடித்து தரப்படும். மேலும் இப்பகுதிலேயே ஒரு அங்கன்வாடி மையமும் கட்டப்பட்டு வருகிறது. இரண்டொரு மாதத்தில் பணியும் நிறைவு பெறும் என்றார்.
தொடா்ந்து, சாவியை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தங்கள் குடும்பத்துடன் புதிய வீட்டை திறந்து பூஜை செய்து குடியேறினா்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் ரிஷப், கோட்டாட்சியா் தனலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுலா்கள் விஜயலட்சுமி, பாலமுருகன், வட்டாட்சியா் மஞ்சுளா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், ஆரணி நகர மன்ற தலைவர் மணி உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu