ஆரணியில் மக்களுடன் முதல்வர் முகாம்

ஆரணியில் மக்களுடன் முதல்வர் முகாம்
X

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நகர மன்ற தலைவர் மணி

ஆரணியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.

ஆரணியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு ஆரணி நகரமன்ற தலைவர் மணி சான்றிதழ் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நகர மன்ற தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது. ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் மக்களுடன் முதல்வர் முகாம் ஏழு கட்டமாக நடைபெற்றன. மேலும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முகாம் நிறைவு நாளில் வார்டு எண் 1,2,3,,910, ஆகிய வார்டு களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன . பின்னர் முகாமில் 3330 மனுக்கள் பெறப்பட்டு 69 மனுக்கள் உள்ளிட்ட 331 நுணுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும் பட்டா மாற்றம் மின் இணைப்பு பெயர் மாற்றம், சாலை வசதி , குடிநீர் இணைப்பு வசதி உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழை ஆரணி நகர மன்ற தலைவர் மணி வழங்கினார்.

மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் விரைவில் அனைத்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மஞ்சுளா, நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி, நகரமன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறையினர் , மின்சார துறையினர், மாற்றுத்திறனாளிகள் துறையினர், ஆதிதிராவிடர் நலத்துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story
உடல்நலக் குறிப்பு இன்று!