மனுநீதி நாள் என்று கொண்டு வந்தவர் கலைஞர் : எம்பி பெருமிதம்..!

மனுநீதி நாள் என்று கொண்டு வந்தவர் கலைஞர் :  எம்பி பெருமிதம்..!
X

பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற தரணிவேந்தன்,எம்பி

மனுநீதி நாள் என்ற திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் தான் என எம்பி பேசினார்

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மயிலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது இம் முகாமில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் பேசியதாவது:

அமைச்சர் சேகர்பாபு பத்தாயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறார் என்றால் தமிழக அரசியல் வரலாற்றிலேயே இப்படி ஒரு நிகழ்ச்சி இதுவரை நடைபெற்றதே கிடையாது. இப்போது தமிழக முதல்வர் ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பண்டைய காலத்தில் ராஜாக்கள் ஆட்சி செய்தார்கள். மனுநீதி சோழன் காலத்தில் இருந்து மக்களிடமிருந்து மனுக்களை ராஜாக்கள் பெற்றார்கள். ஆனால் முதல் முறையாக கலைஞர்தான் மனுநீதி நாள் என்று கொண்டு வந்தார். அதுவே நாளடைவில் மக்களுடன் முதல்வர் என்றானது.

இதில் ஒன்று சேர ஒரே இடத்தில் 17 துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெரும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரணி தொகுதியில் நடத்தப்பட்ட மக்களிடம் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் 70 விழுக்காடு முடித்துக் கொ டுக்கப்பட்டது .

இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் 70 விழுக்காடு முடித்துக் கொடுக்கப்படும். உண்மையான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தரணி வேந்தன் எம்பி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், பொம்மபுர ஆதீனம், ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர் விஜயன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!