ஆரணி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

ஆரணி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
X

மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தரணி வேந்தன் எம்பி

சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி உதவியை, மக்களுடன் முதல்வர் முகாமில் ஆரணி எம்பி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விண்ணமங்கலம் வெள்ளேரி ஆகிய கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி கோட்டாச்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் பங்கேற்றார்.

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் ஆரணி அருகே நெசல் கிராமத்தில் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சிவா என்ற வாலிபர் சாலையில் விழுந்த மரத்தின் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதிக்கபட்ட குடும்பத்தினருககு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு , சார்பில் சுமார் 1லட்சம் ரூபாயை பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் வழங்கி ஆறுதல் கூறினார்.

பின்னர் மக்களுடன் முதல்வர் நிகழச்சியில் விண்ணமங்கலம், ஆகாரம், ராந்தம், தச்சூர், மருசூர், வெள்ளேரி, சங்கீதவாடி , ஆதனூர் உள்ளிட்ட கிராம பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் மின்சார துறை வருவாய் துறை உள்ளிட்ட 14 துறைகள் சம்மந்தமாக மனுக்களை ஆரணி எம். பி.தரணிவேந்தன் பெற்று கொண்டார்.

அதேபோல, ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வெள்ளேரி கிராமத்தில் நடைபெற்றது. இதில் வெள்ளேரி, ஆதனூா், சங்கீதவாடி, மொரப்பந்தாங்கல், லாடவரம் ஆகிய கிராம மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் 657 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 959 மனுக்கள் பெறப்பட்டு 460 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. ஆரணி ஒன்றியத்தில் 714 மனுக்கள் பெறப்பட்டு 279 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டன. மொத்தம் 954 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா்கள் பச்சையம்மாள் சீனிவாசன், கனிமொழி , ஆரணி வட்டாட்சியர் கௌரி, நகா்மன்றத் தலைவா் மணி, ஒன்றியச் செயலா்கள், ஒன்றியக் குழு தலைவா் துணைத் தலைவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், கலந்து கொண்டனா்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!