ஆரணியில் கில்லா சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்
ஆரணியில் கில்லா சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம், சிறப்பாக நடைபெற்றது.
HIGHLIGHTS

தேரை வடம் பிடித்து இழுத்த புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம்
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலர்மேலு மங்கை சமேத கில்லா சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது,.
அதனைத் தொடர்ந்து தினம் தோறும் பகல் மற்றும் இரவில் புஷ்ப பல்லாக்கு, பெரிய கருட சேவை, யானை வாகனம் போன்ற வாகனங்களில் சீனிவாச பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. திருத்தேரை அனைத்து கட்சியினரும் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி .சண்முகம், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், நகர மன்ற தலைவர் மணி, நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு, மேலாண்மை குழு உறுப்பினர் அன்பழகன் , மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள், அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் லதா பாபு, திமுக, அதிமுக, புதிய நிதி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் தேர் சின்னக்கடை தெரு, பழனி ஆண்டவர் கோவில் தெரு, பாட்ஷா தெரு, பெரிய ஜெயின் தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேர் மீது உப்பு, மிளகு, பொரி உருண்டை, சாக்லேட், இனிப்பு போன்றவற்றை இறைத்து வணங்கினர். ஆங்காங்கே பக்தர்களுக்கு வியாபாரிகள் வெள்ளநீர், நீர் மோர், குளிர்பானம் போன்றவைகளை வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் சிவாஜி, அறங்காவலர் குழுத்தலைவர் லதா பாபு, அறங்காவலர்கள், திருக்கோவில் ஊழியர்கள் ,இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.