பைக்கில் சென்ற தம்பதியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

பைக்கில் சென்ற தம்பதியிடம் 5 பவுன் செயின் பறிப்பு
X
ஆரணியில் பைக்கில் சென்ற தம்பதியிடம் 5 பவுன் செயினை பறித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நகை செய்யும் தொழிலாளி அருணகிரி, . இவரது மனைவி மகாலட்சுமி. இவர்கள் இருவரும் பைக்கில் ‌ஷராப் பஜார் தெருவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்திருந்த 2 கொள்ளையர்கள் தம்பதியினரை பின்தொடர்ந்து வந்து, மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து மின்னல் வேகத்தில் தப்பினர்.

மேலும் தகவலறிந்த வந்த ஆரணி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!