வினோதமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்
தலையில் ஆவணங்களை சுமந்து வந்த வேட்பாளர்
தேர்தல் என்றாலே ஒரு திருவிழா தான்.இந்தத் தேர்தல் திருவிழாவின்போது வேட்பாளர்கள் பலர் பல வினோதமான முறைகளில் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார் . பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும். அந்த வகையில்
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு வேப்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஜெகநாதன் என்பவர் வேட்பு மனு தாக்கல் ஆவணங்களை தலையில் சுமந்தவாறு வந்தார்.
பின்னர் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் ஆவணங்களை தலையில் சுமந்து வந்தது ஏன் என செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது,
அவர் கூறுகையில், தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்களின் சொத்து குறைவாகவும் வெற்றி பெற்ற பின் சொத்துக்கள் பல மடங்கு அதிகரிக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆவணங்களை தலையில் சுமந்தவாறு வேட்பு மனுவினை தாக்கல் செய்ய வந்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெகநாதன் கூறினார்.
பத்து ரூபாய் நாணயங்களை டெபாசிட் செய்த வேட்பாளர்
ஆரணியில் பத்து ரூபாய் நாணயங்களை தேர்தல் அதிகாரியிடம் டெபாசிட் செய்து வேட்பு மனுவை வேட்பாளர் ஒருவர் தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவை தேர்தலில் அண்ணா எம்ஜிஆர் மக்கள் திராவிட மக்கள் கட்சி வேட்பாளராக செஞ்சி பகுதியை சேர்ந்த மணவாளன் என்பவர் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் முத்துராம சிங்கப்பெருமாள் அறிவித்திருந்தார்.
அதன்படி வேட்பாளர் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அதில் வைப்புத் தொகையாக பத்து ரூபாய் நாணயங்களை அதிகாரியிடம் அவர் வழங்கினார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், என்னை அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவித்துள்ளார்கள். நாணய புரட்சி செய்வதற்கு வைப்பு தொகையை பத்து ரூபாய் நாணயங்களாக அதிகாரியிடம் வழங்கியுள்ளேன் .
புழக்கத்தில் 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காகவே இவ்வாறு செய்தேன் என அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கட்சியின் வேட்பாளர் மணவாளன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu