ஆரணி அருகே சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: சிறுவன் உயிரிழப்பு

ஆரணி அருகே சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: சிறுவன் உயிரிழப்பு
X

பரிதாபமாக இறந்த சிறுவன் விஷ்ணு

Today Accident News in Tamil -ஆரணி அருகே சைக்கிள் மீது பஸ் மோதியதில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Today Accident News in Tamil - ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஈ.பி.நகர், கன்னி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், கார் டிரைவர். இவரது மகன் விஷ்ணு (வயது 11). இவர் நேற்று இரவு தாய் புஷ்பலதா கூறியதன் பேரில் ஓட்டலுக்கு சென்று சாம்பார் வாங்கி வருவதற்காக சைக்கிளில் சென்றார்.

ஆரணி - ஆற்காடு ரோட்டில் சென்டர் மீடியாவை கடந்து சைக்கிளில் செல்லும் போது செய்யாறில் இருந்து ஆரணி நோக்கி வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ் பின் சக்கரத்தில் விஷ்ணு சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த போலீசார் சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த விஷ்ணு ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று 6-ம் வகுப்பு சேர்க்கப்பட்டார். சீருடையை வாங்கி வந்து தைக்க கொடுத்துவிட்டதாகவும், புத்தகங்களை பைண்டிங் செய்வதற்காக கொடுத்துவிட்டு வந்ததாகவும் மருத்துவமனை வளாகத்தில் பெற்றோர் கூறி கதறும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story