ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து  பணம் கொள்ளை
X

உடைக்கப்பட்ட கோயில் உண்டியல்.

ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் இ.பி.நகர் பகுதியில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் விநாயகர் கோவில் உள்ளது. அந்தப் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். எப்பொழுதும் இந்த கோவிலில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

நேற்று இரவு மர்மநபர்கள் யாரோ விநாயகர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி ஏழுமலை ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்து வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!