ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் உலக புத்தக தின விழா

ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் உலக புத்தக தின விழா
X

மாவட்ட கிளை நூலகத்தில்,  உலக புத்தக தின விழா நடைபெற்றது. இதில்,  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆரணி அருகேயுள்ள கண்ணமங்கலத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தில் உள்ள மாவட்ட கிளை நூலகத்தில், உலக புத்தக தின விழா நேற்று நடந்தது. அதையொட்டி வாசகர் வட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பள்ளி மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில வேலூர் மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் பூங்கொடி செல்வம், ஓய்வுபெற்ற நீதிமன்ற அலுவலர் பாலாஜி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஓய்வுபெற்ற அலுவலர் சேகர், சங்கர் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். 10 பேர் தலா ரூ.1000 செலுத்தி நூலக புரவலர்களாக இணைத்துக் கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் நூலக ஊழியர்கள், நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!