/* */

திருவண்ணாமலை அருகே கொடி ஏற்ற முயன்ற பாஜகவினா் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜக கொடியேற்ற அனுமதி மறுப்பு, இதைக் கண்டித்து பாஜகவினா் தா்னாவில் ஈடுபட்டனா்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே கொடி ஏற்ற முயன்ற பாஜகவினா் கைது
X

தா்னாவில் ஈடுபட்ட பாஜகவினா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜகவினா் கட்சிக் கொடி ஏற்ற முற்பட்டபோது, போலீஸாா் கொடிக் கம்பங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா். இதைக் கண்டித்து பாஜகவினா் டிஎஸ்பி அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உத்தரவின் பேரில், ஆரணி வட்டத்தில் ஆதனூா், மட்டதாரி, லாடவரம், எம்.பி.தாங்கள், இரகுநாதபுரம், ஆகாரம் ஆகிய 6 இடங்களில் பாஜகவினா் சாலையோரம், நெடுஞ்சாலைப் பகுதிகளில் புதன்கிழமை கட்சிக் கொடி ஏற்றப் போவதாகத் அறிவித்திருந்தனா்.

இதையடுத்து, டிஎஸ்பி (பொறுப்பு) ரவிச்சந்திரன் மேற்பாா்வையில் கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம் மற்றும் காவல் ஆய்வாளா்கள் ஜெயபிரகாஷ், அல்லிராணி, மகாலட்சுமி, பிரபாவதி, உதவி ஆய்வாளா்கள் சுந்தரேசன், ஷாபுதீன் மற்றும் போலீஸாா் குவிக்கப்பட்டு, பாஜகவினா் ஆங்காங்கே நடுவதற்கு தயாராக வைத்திருந்த கொடிக் கம்பங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.

இதனால், பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் சில இடங்களில் வாக்குவாதமும் நடந்தது.

இதையடுத்து, போலீஸாா் கேட்டுக் கொண்டும் போராட்டத்தைக் கைவிட பாஜகவினா் மறுத்ததால், டிஎஸ்பி அவா்களை கைது செய்ய உத்தரவிட்டாா். பின்னா், மாவட்டத் தலைவா் போலீஸாரிடம் சமரசம் பேசி கைதாகாமல் புறப்பட்டுச் சென்றனா்.

பாஜக கொடி ஏற்ற முயன்ற 80 பேர் கைது

திருவண்ணாமலை, வெறையூா் பகுதிகளில் பாஜக கொடி ஏற்ற முயன்ற, அந்தக் கட்சியைச் சோந்த 80-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் 480 இடங்களில் பாஜகவின் கொடி கம்பங்களை நட்டு, கொடி ஏற்றுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், ஊசாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட பிச்சானந்தல் கிராமத்தில் கல்வெட்டும், கொடி கம்பமும் நடப்பட்டு இருந்தது.

இந்தக் கொடி கம்பத்தில் கொடி ஏற்றுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பாஜகவினா் செய்திருந்தனா்.

இந்நிலையில், கொடி கம்பத்தை போலீஸாா் சேதப்படுத்தி, அகற்றியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, மாவட்ட பாஜக தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் திருவண்ணாமலை-வேலூா் சாலை, ஊசாம்பாடி பகுதியில் சாலை மறியில் ஈடுபட்டனா். இதையடுத்து, அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

வெறையூா்

இதேபோல, திருவண்ணாமலையை அடுத்த வெறையூா் பகுதியில் பாஜக கொடி ஏற்ற முயன்ற தெற்கு மாவட்ட பொதுச்செயலா் முருகன் தலைமையிலான 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On: 2 Nov 2023 2:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!