ஆரணியில் ரூ.30 லட்சம் வளர்ச்சிட்ட பணிகளுக்கு பூமி பூஜை

ஆரணியில் ரூ.30 லட்சம் வளர்ச்சிட்ட பணிகளுக்கு பூமி பூஜை
X

சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

ரூ.30 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

ஆரணியில் 30 லட்சத்தில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சி பணிகளை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

ஆரணி நகரில் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள குளக்கரை அருகே தடுப்பு சுவர் கட்டுதல், 12 வது. பகுதியில் இரு சிறு பாலங்கள் அமைத்தல்கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் கலையரங்கம் அமைத்தல், ஆரணி பாளையம் கிலாஸ்கார தெருவில் பக்க கால்வாய் உடன் சிமெண்ட் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் ரூபாய் 30 லட்சத்தில் நடைபெற உள்ளன.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் இந்த பணிகளுக்கு ஆரணி தொகுதி எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் ,பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ,ஒன்றிய செயலாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!