ஆரணி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த 6 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

ஆரணி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த 6 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
X

ஆரணி துணை போலீஸ் சூப்பரண்டு ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறை அதிகாரிகள்.

ஆரணி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த 6 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்திரவின் பேரில் ஆரணி நகரில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 6 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. என ஆரணி துணை போலீஸ் சூப்பரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் ஆரணி கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை இல்லை. என்றாலும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர். போதை பொருட்களை தடுக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, சாராய வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!