கைத்தறி முத்திரை திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
கைத்தறி முத்திரை திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கைத்தறி முத்திரை திட்ட கைபேசி செயலி, இணையதளம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி சென்னை அலுவலகம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற கைத்தறி முத்திரை திட்ட கைபேசி செயலி, இணையதளம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் உதவி இயக்குனர் பூர்ணிமா கலந்து கொண்டார். அவர் உரையாற்றும் போது
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக 35.2 லட்சம் பேர் கைத்தறி மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். மொத்த உற்பத்தியில் 15 சதவீதம் கைத்தறித் துறையில் இருந்து கிடைக்கிறது. கைத்தறி முத்திரை திட்டம் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் டெக்ஸ்டைல் கமிட்டி மூலம் செயல்படுத்தப்படுகிறது.
நெசவாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் வருமானம் அதிகரிக்க வழிவகை செய்கிறது, எனவே கைத்தறி முத்திரையிடப்பட்ட ஜவுளி பொருள்களை வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனக் கூறினார்.
நிகழ்ச்சியில் மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சியாளர் ரகு , மாவட்ட கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குனர் இளங்கோவன், காஞ்சிபுரம் மத்திய பட்டு வாரியத்தின் உதவி இயக்குனர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி பொன்னுசாமி, ஆரணி பகுதி பட்டு கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர்கள், நெசவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu