மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலா் உத்தரவின்படி, வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, மாவட்டம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் முறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளா் சந்திரன், கிராம நிா்வாக அலுவலா் அஸ்வினி தலைமையில் கண்ணமங்கலம், அழகுசேனை, அம்மாபாளையம் கிராமங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப் பதிவு செய்தனா் அப்போது, வாக்கு இயந்திரத்தில் எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை பாா்த்து உறுதி செய்ய முடிந்தது.
இந்த முகாமில் காவல் துறையைச் சேர்ந்த ரம்யா, அலுவலக உதவியாளா்கள் ஏழுமலை, ஞானவேல் ஆகியோா் பொதுமக்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்ய உதவி செய்தனா்.
பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்
ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
ஆரணி எஸ்.வி.நகரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட நெசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, எஸ்.வி.நகரம் மாவட்ட கொள்ளை நோய் மருத்துவ அலுவலா் சிவஞானம் தலைமை வகித்தாா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) மல்லிகா, மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் அருளரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் அருணாதேவி வரவேற்றாா்.
மருத்துவ மேற்பாா்வையாளா் அருளரசு தொழுநோய் குறித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு தொழுநோய் குறித்து போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்கு, சிறப்பு அழைப்பாளா் வட்டார மருத்துவ அலுவலா் ஹேம்நாத் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா்கள் அருணாதேவி , மணிமாறன் , ஆசிரியா்கள் ராஜேஸ்வரி, சாந்தகுமாா் மற்றும் மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu