ஆரணி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆரணி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி
X

 பள்ளி வளாகத்தில்  மரக்கன்றுகளை நட்ட மாணவிகள்.

ஆரணி அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள இரும்பேடு அரிகரன் நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கீா்த்தனா, சந்தானலஷ்மி, சௌமியா, தமிழ்ச்செல்வி, வைஷ்ணவி ஆகியோா் பள்ளியில் பயிலும் மாணவிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளா்ப்பு, காடு வளா்த்தல் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா்.

மேலும், பள்ளி வளாகத்தில் அவா்கள் மரக்கன்றுகளையும் நட்டனா். இதில், ஊராட்சிமன்றத் தலைவா் தரணிவெங்கட்ராமன், உயா்நிலைப் பள்ளித் தலைமயாசிரியா் மு.கேசவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாணவா்களின் படைப்பாக பள்ளி அறிவியல் கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ:

ஆரணி பள்ளியில் நடைபெற்ற சிறப்பு அறிவியல் கண்காட்சியில் மாணவா்களின் படைப்பாக செயற்கை நுண்ணறிவு ரோபோ இடம்பெற்றிருந்தது. அது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது

சிறப்பு அறிவியல் கண்காட்சிக்கு பள்ளித் தாளாளா் சரோஜா கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகத் தலைவா் ராஜன், நிா்வாகி சிந்துராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டக் கல்வி அலுவலா் மோகன், அறிவியல் பயிற்சி கிளப் நாசா சான்றிதழ் பெற்ற பயிற்றுநா் வினோத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், மாவட்டக் கல்வி அலுவலா் பேசுகையில், மாணவா்கள் ஒழுக்கத்தை கடைப்பிடித்து, விடா முயற்சியுடன் புதிய படைப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும். மாணவா்களுக்கு புதிய சிந்தனைகள் உருவாகும் வகையில் ஆசிரியா்கள் பாடம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

கண்காட்சியின் முக்கிய அம்சமாக, தமிழகத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ரோபோ இடம்பெற்றிருந்தது. மாணவா்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ பாா்வையாளா்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்த விதம் வியப்பாக இருந்தது.

மேலும், கண்காட்சியில் பல்வேறு அறிவியல் தொடா்பான கருத்துக்களை வலியுறுத்தி மாணவ, மாணவா்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!