பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

காவல்துறையின் சார்பில், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பார் கார்த்திகேயன் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் காவல்துறையின் சார்பாக பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புண்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் ஆரணி நகர போலீஸ் நிலையம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு தலைமை ஆசிரியை மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
ஆரணி டவுண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் கலந்துகொண்டு குழந்தை திருமணம் தடுப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். மேலும் அவர் பள்ளிக்கு வரக்கூடிய மாணவ மாணவிகள் செல்போன் கொண்டு வரக்கூடாது, இரு சக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே வர வேண்டும், தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதனையும், பட காட்சிகளுடன் கலை நிகழ்ச்சிகளுடனும் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் ஜோதி செல்வராஜ், தாளாளர் பூபதி, நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், பெண் காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
வாணாபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமணத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கலந்துகொண்டு பேசினார்.
18 வயதிற்கு உட்பட்டவராக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறுவது குற்றமாகும். மேலும் சுற்றுவட்டார பகுதியில் குழந்தை திருமணம் நடைபெற்றால் உடனடியாக போலீஸ் நிலையம், பெண் குழந்தை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
இதில் காவலர்கள் அம்மு, சகாயராணி, தனிப்பிரிவு காவலர் ராமராஜன் மற்றும் குழந்தை நல அலுவலர் அசோக் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தண்டராம்பட்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சி
திருவண்ணாமலை மாவடட காவல்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பார் கார்த்திகேயன்,. நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி தண்டராம்பட்டு, தானிப்பாடி, ஆரணி, புதுப்பாளையம், எறையூர் ஆகிய பகுதிகளிலுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜமுனாமரத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் பெண் குழந்தைகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்புகலை பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தண்டராம்பட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலை பயிற்சிகள் தொடங்க்பட்டன. அதில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பார் சவுந்தரராஜன் மேற்பார்வையில், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா தலைமையில் இந்த பயிற்சி நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu