ஆரணியில் வழக்கு சமரசம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஆரணியில் வழக்கு சமரசம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
X

ஆரணியில் வழக்கு சமரச சம்பந்தமான விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்

ஆரணியில் வழக்கு சமரச சம்பந்தமான விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்

ஆரணியில் வழக்கு சமரச சம்பந்தமான விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார் ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கு சமரச சம்பந்தமான விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களிடம் வழக்கு சமரசம் சம்பந்தமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்.

ஊர்வலத்தில் சார்பு நீதிபதி க.ஜெயவேல், மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, ஆரணி மாவட்ட உரிமையியல் நீதிபதி சதீஷ்குமார், ஆரணி வக்கீல் சங்கத் தலைவர் எஸ்.ஸ்ரீதர், அரசு வக்கீல் ராஜமூர்த்தி, வக்கீல்கள் நந்தகுமார், சண்முகம் மற்றும் ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி