தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி!

தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி!

விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்திய தீயணைப்பு துறையினர்

ஆரணி அருகே தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரணி அருகே தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் பாளையம் பெரிய ஏரியில் வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதை முன்னிட்டு தீயணைப்பு துறையினரின் ஒத்திகை பயிற்சி நிகழ்ச்சி தீயணைப்பு அலுவலர் பூபாலன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதை முன்னிட்டு நீர் நிலைகளின் அருகே சிறுவர் சிறுமியர் செல்லக்கூடாது என்றும் ஏரிகளில் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டால் எப்படி காப்பாற்றுவது மற்றும் முதலுதவி அளிப்பது பற்றியும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தத்துரூபமாக நடித்து காட்டினர் .

மேலும் தண்ணீரில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது கரைக்கு கொண்டு வந்த பிறகு மூச்சு காற்றை உள் செலுத்தி காப்பாற்றுவது உள்ளிட்டவற்றை செய்முறையாக தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு அடையபலம் கிராமத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் ஏற்படாமல் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கண்டு பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் எடுத்துரைத்து பேசினார்.

இதில் வட்டாட்சியர் கெளரி ஊராட்சி மன்ற தலைவர் குப்பு சங்கர் வருவாய் துறையினர் தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கீழ்பெண்ணாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் கருங்காலி குப்பம் பெரிய ஏரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளத்தில் சிக்கி அவர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் தீயணைப்பு அலுவலர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் செயல் விளக்கத்தினை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் கீழ்பெண்ணாத்தூர் தாசில்தார் சரளா, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வருவாய்த் துறையினர், தீயணைப்புத்துறையினர், துறை சார்ந்த அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போளூர்

எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு போளூர் ஜமுனாமருதூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் பொது மக்களுக்கு ஒத்திகை பயிற்சி ஜமுனாமருதூர் கிராமத்தில் கோலப்பன் ஏரி பகுதியில் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான குழுவினர் , வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story