ஆரணி அருகே இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை கொண்டு செல்லும் அவலம்

ஆரணி அருகே இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை கொண்டு செல்லும் அவலம்
X

தண்ணீரில் சடலத்தை கொண்டு சென்ற பொதுமக்கள்

ஆரணி அருகே ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை கொண்டு சென்றனர்.

காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு ஏற்ப ஆரணி அருகே சடலத்தை கொண்டு செல்ல வழி இல்லாமல் நாக நதி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தைக் கொண்டு செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, கமண்டலாபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக மயான பாதையில்லாமல் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆட்சிகள் மாறினாலும் இதுநாள் வரையில் காட்சிகள் மாறவில்லை என்பது போல இந்த கிராமத்தின் பொதுமக்களின் கோரிக்கை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை. இறந்தவர்களின் சடலத்தை நாகநதி ஆற்றில் இறங்கி கொண்டு செல்ல அவலமும் தொடர்கதையாக உள்ளன.

இந்நிலையில் தற்போது கமண்டல நதி ஆற்றில்வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளன. கமண்டலாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி குள்ளன்(எ) பிரகாஷ் என்பவர் நேற்று விடியற்காலையில் இயற்கை எய்தினார்.

இவரின் சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் கமண்டல நதி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் சடலத்தை பொதுமக்கள் சுமந்து சென்று சுடுகாட்டில் சடங்கு நடத்தி புதைத்தனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில்; திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கமண்டலபுர கிராமத்தில் வசிக்கிறோம் எங்கள் கிராமத்தின் பொதுமக்களின் கோரிக்கை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை இறந்தவர்களின் சடலத்தை நாகநதி ஆற்றில் இறங்கி கொண்டு செல்ல அவலமும் தொடர்கதையாக உள்ளோம். தற்போது கமண்டல நதி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் கமண்டல நதி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் சடலத்தை பொதுமக்கள் சுமந்து சென்று சுடுகாட்டில் சடங்கு நடத்தி புதைகிறோம்.

இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீட்டு மயான பாதையை அமைத்து தர வேண்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!