சொத்தை அபகரிக்க உயிருடன் இருக்கும் சிறுவனுக்கு இறப்பு சான்றிதழ்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
ஆரணி அருகே உயிருடன் உள்ள சிறுவனை இறந்ததாக கூறி போலி ஆவணம் தயாரித்து இறப்பு சான்றிதழ் வாங்கி ரேஷன்கார்டில் பெயர்நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சொத்தை அபகரிக்க முயன்று இ்வ்வாறு செய்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி பூங்காவனம். இவர்களுக்கு ஹரிஹரன், கோபி என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மேலும் ஏற்கனவே பூங்காவனம் தனது பூர்வீக சொத்து சம்மந்தமாக தன்னுடைய தாயார் மீது வழக்கு தொடுத்து போளுர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் பூங்காவனம் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். தந்தை கார்த்திகேயன் என்பவர் தற்போது வரையில் காணவில்லை, இதனால் ஹரிகரன் மற்றும் கோபி ஆகியோர் பெற்றோரை இழந்து தனிமையில் இருந்துள்ளனர்.
மூத்த மகன் ஹரிகரன் பாட்டி சின்ன பொண்ணு வளர்ந்து வருகிறார். இளைய மகன் கோபி, உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். பூங்காவனம் இறந்த அதே நாளில் கோபியும் இற்து விட்டதாக போலியான ஆவணங்களை தாக்கல் செய்து இறப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோபி ரேஷன் கடைக்கு சென்று தன் குடும்ப அட்டையில் பொருட்களை வாங்க சென்ற போது உன் பெயர் இல்லை, உன் பெயர் நீக்கப்பட்டுள்ளது என ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதால் கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவர் உடனடியாக போளூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் சென்று இது குறித்து கேட்டபோது கோபி என்ற பெயரில் இறப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதால் ரேஷன் கார்டில் இருந்து இந்தப் பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இது தொடர்பாக சிறுவன் கோபி உறவினர்களின் உதவியுடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலியாக ஆவணம் தயாரித்து அதன் மூலம் இறப்பு சான்றிதழ் பெற்று சொத்தினை அபகரிக்க முயன்றுள்ளதாக கூறி பாட்டி சின்னபொன்னு, பெரியம்மா பரமேஸ்வரி இதற்கு உடைந்தையாக இருப்பதாக ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சிலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடைபெற உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணம் தயாரித்து பேரன் கோபி இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் பெற்று, அதன் மூலம் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்து, வாரிசு சான்றிதழ் பெற முயன்று சொத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் களம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu