திருவண்ணாமலை வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

திருவண்ணாமலை வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
X

ஒன்றிய குழு கூட்டம்.

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனசுந்தரம், ஏ.பி.வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் அலுவலக மேலாளர் பாஸ்கரன், வரவேற்றார். கூட்டத்தில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு ரூ.3 கோடியே 64 லட்சம் ஒதுக்கீடு செய்த முதல்வருக்கும், மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்ட வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!