ஆரணி வருவாய் கோட்டாட்சியருக்கு கொரோனா

ஆரணி வருவாய் கோட்டாட்சியருக்கு கொரோனா
X
‌ஆரணி வருவாய் கோட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய பட்டதால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடி என்பவருக்கு கொரோனா நோய் பரிசோதனையில் தொற்று உறுதி செய்ய பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு பிரிவில் முதற்கட்ட சிகிச்சை பெற்று பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதன் காரணமாக ஆரணி கோடை மைதானம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!