ஆரணி ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேரோட்டம்: அதிகாரிகள் ஆய்வு
ஆரணி வரதராஜ பெருமாள் தேரோட்டம் குறித்து அதிகாரிகள் வீதிகளை ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பெரியகடை வீதியில் அமைந்துள்ள பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகிற 7ஆம் தேதி நடைபெற உள்ளது. பெரியகடைவீதி, சத்தியமூர்த்தி சாலை, காந்தி சாலை, வடக்கு மாடவீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை அடையும்.
இந்த வீதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க, கோவில் செயல் அலுவலர் ம.சிவாஜி, ஆரணி தாசில்தார் க.பெருமாள், ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பரந்தாமன், கோவில் ஆய்வாளர் நடராஜன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் வேலுமணி மற்றும் விழா குழுவை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது தேர் செல்வதற்கு சாலைகள் சரியாக உள்ளனவா, இடையூறாக உள்ள மின் கம்பங்கள் ,மரங்களை அகற்றவும், கால்வாய்கள், சாலையில் பழுதடைந்துள்ள பகுதிகளை சீரமைத்தால், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சரிசெய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu