ஆரணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தல்

ஆரணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தல்
X

ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தப்பட்டது.

ஆரணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கே.டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறியாளர் மதுசூதனன் புதிதாக பொறுப்பேற்றுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமியை அறிமுகம் செய்து வைத்து பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.

எஸ்.வி.நகரம் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கவிதாபாபு பேசியாதாவது:- எங்கள் எஸ்.வி.நகரம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை அதிகளவில் உள்ளன. அடிக்கடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுவதால் யாரிடம் பிரச்சினை பற்றி கூறுவது என்று தெரியவில்லை, சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பிரச்சினைகள் தீர்க்க வட்டார வளர்ச்சி அலுவலகம் நடவடிக்கை எடுக்காததை வன்மையாக கண்டிக்கின்றேன். எங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்குப் பதிலளித்த வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி, உடனே சம்பவ இடத்துக்குச் சென்று பிரச்சினைக்குத் தீா்வு காணப்படும் என்று கூறினாா்.

யசோதா சண்முகம் பேசுகையில், வடுகசாத்து கிராமத்தில் குளத்து மேட்டு தெருவில் உள்ள சிறுபாலம் பழுது ஏற்பட்டது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கூறினாா்.

கூட்டத்தில், ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு மற்றும் மா்மக் காய்ச்சல்களை தடுக்கும் பொருட்டு பணியாற்றும் டெங்கு மஸ்தூா் பணியாளா்களுக்கு, 2022 நவம்பா், டிசம்பா் மாதங்களுக்கான கூலி ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்து 472 ஒதுக்கீடு செய்தும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்புப் பணிக்காக, கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பா் வரை ஊதியத்தொகை ரூ.14 லட்சத்து 88ஆயிரத்து 900 வழங்கியமைக்கும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture