ஆரணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: பொதுமக்கள் கோரிக்கை மனு

ஆரணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: பொதுமக்கள் கோரிக்கை மனு
X

ஒன்றிய குழு கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன்

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய குழு கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றுப் பேசினர்.

இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கான செயல்பாடுகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை மனு

குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி தீயிட்டு கொளுத்துவதால் புகை மூட்டம் ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படுவதாகவும் தொற்று நோய் பரவுவதாகும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்து மனு அளித்தனர்.

ஆரணி ஒன்றிய குழு தலைவரிடம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குன்னத்தூர் ஊராட்சியில் சுமார் 5,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம் இந்த கிராமத்தில் உள்ள சாய் பூ தெரு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் சிலர் குப்பைகளைக் கொட்டி தீயிட்டு கொளுத்துவதால் புகைமூட்டம் ஏற்பட்டு அருகே உள்ள குடியிருப்புகள் உள்ளே புகுந்து சிறுவர்கள், முதியவர்கள்* மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது . மேலும் அவ்வழியே நடந்து செல்லும் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது , எனவே இப்பகுதியை சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings