திண்டிவனம் நகரி ரயில் பாதை குறித்து ஆரணி எம் பி

திண்டிவனம் நகரி ரயில் பாதை குறித்து  ஆரணி எம் பி
X
திண்டிவனம் நகரி ரயில் பாதைக்கு கூடுதல் நிதி தேவை ஒதுக்க வலியுறுத்துவதாக ஆரணி எம் பி பேட்டியளித்துள்ளார்

ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திண்டிவனம் - நகரி ரயில் பாதை 2006 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ரயில் பாதை அமைய உள்ள 33 கிராமங்களில் நில எடுப்பு பணிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட 2006 ஆம் ஆண்டு ரூபாய் 450 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்திற்கு இத்திட்டத்தை நிறைவேற்ற 3 ஆயிரம் கோடி வரை நிதி தேவைப்படுகிறது.

எனவே அடுத்த வாரம் டெல்லிக்கு சென்று ரயில்வே அமைச்சரிடம் இந்த ரயில் பாதை திட்டத்தை பற்றி கூறி கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்துவேன்.

மேலும் ஆரணி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவமனை அமையவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் ஆரணி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு உபகரணங்கள், காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!