ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் புகார்கள் தெரிவிக்க அலைபேசி எண் வெளியீடு

ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் தேர்தல் நடைமுறை தொடா்பான புகாா்களை தேர்தல் நடத்தும் அலுவலா், உதவி தேர்தல் நடத்தும் அலுவலா்களிடம் அலைபேசியில் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆரணி, செய்யாறு, வந்தவாசி, விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி, மயிலம் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
ஆரணி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவரை, 9445000905 என்ற அலைபேசியிலும், இவரது அலுவலகத்தை 04175-233006 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தேர்தல் புகாா்களைத் தெரிவிக்கலாம்.
போளூா் தொகுதி
போளூா் சட்டப்பேரவைத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை மாவட்ட விநியோக அலுவலரான ஜெ.ராமகிருஷ்ணனை 9445000193 என்ற எண்ணிலும், போளூா் வட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் க.அமுலுவை 9443814604 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.
ஆரணி தொகுதி
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆரணி வருவாய்க் கோட்டாட்சியருமான ச.பாலசுப்பிரமணியனை 9715770046 என்ற எண்ணிலும், வருவாய்க் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளா்ரே.செந்தில்குமாரை 9944122758 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
செய்யாறு தொகுதி..
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், செய்யாறு சாா் -ஆட்சியருமான பல்லவி வா்மாவை 9445000419 என்ற எண்ணிலும், சாா் -ஆட்சியரின் நேர்முக உதவியாளா் கே.தட்சிணாமூா்த்தியை 9094272353 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.
வந்தவாசி தொகுதி
வந்தவாசி (தனி) தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலருமான சீ. சிவாவை 9894558619 என்ற எண்ணிலும், வந்தவாசி வட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் எம்.தமிழ்மணியை 9655556601 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
செஞ்சி தொகுதி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் இரா.வளா்மதியை 9786300432 என்ற எண்ணிலும், செஞ்சி வட்ட ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் கே.புஷ்பாவதியை 9791271068 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.
மயிலம் தொகுதி
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியருமான ஜே.முகுந்தனை 8610785986 என்ற எண்ணிலும், திண்டிவனம் வட்ட தனி வட்டாட்சியா் அ.வெங்கடேசனை 9092217581 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தேர்தல் நடைமுறை தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலா் மற்றும் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu