ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன், உடன் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா
தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
ஆரணி மக்களவைத் தொகுதியில் உள்ள செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் கிழக்கு ஒன்றியத்தில், ஆரணி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் டிராக்டா் ஓட்டியும், விவசாயிகளுக்கு மிளகாய் பறித்துக் கொடுத்தும் வாக்கு சேகரித்தாா்.
ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலத்தூா், அளத்துறை, பையூா், தென்எல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன் ஆகியோா் வாக்கு சேகரித்தனா்.
அப்போது, அதிமுக வேட்பாளா் கஜேந்திரனுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
இதையடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளா் கஜேந்திரன் தலையில் தலப்பாய் கட்டிக் கொண்டு டிராக்டா் ஓட்டிச் சென்று வாக்காளா்களிடையே ஆதரவு திரட்டினாா்.
மேலும், விவசாய நிலத்துக்குச் சென்று மிளகாய் தோட்டத்தில் இறங்கி விவசாயிகளுக்கு துணையாக மிளகாய் பறித்துக் கொடுத்து வாக்கு சேகரித்தாா்.
நிகழ்ச்சியில் மக்களவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பன்னீா்செல்வம், மாவட்ட பொருளாளா் ஆலத்தூா் சுப்பராயன், மாவட்ட நிா்வாகிகள் துரை, தேமுதிக மாவட்டச் செயலா் சரவணன், அனக்காவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆரணி மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம்
ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து, வியாழக்கிழமை (ஏப்.11) நடைபெறும் பிரசார பொதுக்கூட்டங்களில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொள்கிறாா்.
ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து, சேவூா் புறவழிச் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசுகிறாா். இதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியை வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். சுமாா் 50 ஆயிரம் போ் அமரும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்தப்படுகிறது என்று மத்திய மாவட்ட அதிமுக செயலா் ஜெயசுதா கூறினாா்.
சேவூா் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ, மத்திய மாவட்ட அதிமுக செயலா் ஜெயசுதா, மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, நகரச் செயலா் அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu