2 ஆசிரியர், 22 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

2 ஆசிரியர், 22 மாணவிகளுக்கு கொரோனா தொற்று
X

ஆரணி அரசு மேல்நிலைப்பள்ளி

ஆரணி அரசு பள்ளியில் 2 ஆசிரியர், 22 மாணவிக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,200க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். ஒன்பது முதல், பிளஸ் 2 மாணவியருக்கு மட்டும் வகுப்பு நடந்து வருகிறது.

பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இரண்டு நாட்களுக்கு முன், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவியர் 200க்கும் மேற்பட்டோர், 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவு வெளியானதில், 22 மாணவியர், இரண்டு ஆசிரியருக்கு தொற்று இருப்பது தெரிந்தது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!