ஆரணி அரசு மருத்துவமனையில் தொகுதி எம்பி ஆய்வு

ஆரணி அரசு மருத்துவமனையில் தொகுதி எம்பி ஆய்வு
X

ஆரணி மருத்துவமனை மருத்துவரிடம் ஆரணி மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாத் ஆலோசனை மேற்கொண்டார்.

Tiruvannamalai News Today -ஆரணி அரசு மருத்துவமனையில் தொகுதி எம்பி ஆய்வு மேற்கொண்டார்.

Tiruvannamalai News Today -ஆரணி மருத்துவமனை மருத்துவரிடம் ஆரணி மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாத் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவர்களிடம் மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாத் பேசும் போது, ஆரணி அரசு மருத்துவமனையில் அனைத்து கட்டமைப்பு வசதிகள் இருந்தும் போதிய அளவு மருத்துவ சிகிச்சை அளிப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ஊசி போடும் போது தேவைக்கு குறைவான மருந்து எடுப்பதாகவும் புகார் வந்துள்ளது. மேலும் அதிக அளவில் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் வந்துள்ளது.

சுகப்பிரசவம் செய்யாமல் அதிகளவில் அறுவை சிகிச்சை செய்துதான் மகப்பேறு செய்வதாகவும் அதிக அளவில் புகார்கள் வந்துள்ளது.

பொதுமக்களுக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சைகளை வழங்குங்கள். மருத்துவமனைக்கு தேவையானதை கேட்டு பெறுங்கள், என பேசினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு மருத்துவர்கள் கவிமணி , மருத்துவ அலுவலர் மம்தா , மருத்துவர்கள் ரமேஷ் , ஷர்மிளா , கணேஷ் , வித்யா , நகர மன்ற தலைவர் மணி , ஒன்றிய செயலாளர் அன்பழகன் , சுந்தர் , ஒன்றிய குழு தலைவர்கள் , மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லி மருத்துவ குழுவினர் ஆய்வு

எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெல்லி மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்

மத்திய 15-வது நிதி மானிய குழுவை சேர்ந்த டெல்லி டாக்டர் மோனாகுப்தா, அட்வைசர் நேஷனல் ஹெல்த் சிஸ்டம்ஸ் ரிசோர்ஸ் சென்டர் அடங்கிய குழுவினர் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பையூர், அரியப்பாடி, ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து சுகாதார நலத்திட்டங்கள் கிராம மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என மக்களிடம் நேரடியாகவே சென்று கருத்து கேட்பு நடத்தினர்.

ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் டி.என்.சதீஷ்குமார், துணை இயக்குனர்கள் (காசநோய்) அசோக், டாக்டர்கள் கார்த்தி, அன்பரசி, சுரேஷ், செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேம்நாத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி சாலையில் உள்ள அரிமா சங்க சுகாதார மையத்தில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமையில் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது.

ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி வரவேற்றார். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக பணி உத்தரவு வழங்கப்படுவதில்லை என்று மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டினர்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் பாலாஜி, செந்தில்குமார், மலர்கொடி, வெங்கடேசன், வட்ட வழங்கல் அலுவலர்கள் வெங்கடேசன், தேவி, மண்டல துணை தாசில்தார்கள் தட்சிணாமூர்த்தி, சாரதா, வருவாய் ஆய்வாளர் நித்யா, கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!