ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவில் தேரோட்டம்: அதிகாரிகள் ஆய்வு

பைல் படம்
ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவில் தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி தேர் செல்லும் பாதையில் நகராட்சி தலைவர், அதிகாரிகள், அறநிலைய துறையினர் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கோட்டை கைலாயநாதர் கோவில் தேரோட்டம் நடக்கும்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மே 1-ந் தேதி தேரோட்டம் நடந்தபோது ஆரணி மணி கூண்டு அருகே சாலை மிகவும் மோசமாக இருந்ததின் காரணமாக தேர் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் ஐந்து நபர்கள் பலியானார்கள்.
அதைத்தொடர்ந்து அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ரூபாய் 31 லட்சம் மதிப்பில் புதிய தேர் அமைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தேர்வு உருவாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. 2021 ஆம் ஆண்டு அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து தற்போது தான் தேரின் முழு பணிகளும் முடிக்கப்பட்டது. இந்த நிலையில் சித்திரை திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மாலை இருவேளையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவிதி உலா நடைபெற்று வருகிறது , இன்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற 1 ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனையொட்டி கோவில் செயல் அலுவலர் சிவாஜி தலைமையில் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி, நகர மன்ற தலைவர் மணி, தீயணைப்புத்துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் ராஜ விஜய காமராஜ், பொதுப்பணித்துறை, மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் தேர் செல்லும் பாதையை ஆய்வு செய்தனர்.
அப்போது தேர் செல்லும் பாதையில் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்களை அகற்றுவது, சாலை மேடு பள்ளமாக இருப்பதை சமன் செய்வது, மரக்கிளைகள் வளர்ந்து இருந்தால் அகற்ற வெட்டி அக்றுவது என இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu