ஆரணி தொகுதி வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் முருகேஷ்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
ஆரணி தொகுதியில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காமக்கூா் பகுதி கமண்டல நாக நதியில் ரூ.4 கோடியே 64 லட்சத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. தச்சூா் கிராமத்தில் இலங்கை தமிழா்களுக்காக ரூ. 5 கோடியே 65 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் முருகேஷ், பணிகளை தரமானமுறையில் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினாா்.
ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வெள்ளேரி, வேலப்பாடி, கமக்கூர், தச்சூர், மருசூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைப்பெற்று வரும் பள்ளி கட்டிடம், சமையல் அறை கட்டிடம், சிமென்ட் சாலை அமைத்தல், நியாயவிலை கடைகள், ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம், இலங்கை தமிழர்களுக்கு 111 அரசு தொகுப்பு வீடு உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னா், ஆரணி வி.ஏ.கே.நகா், ஜெயலட்சுமி நகா் பகுதியில் நடைபெற்று பூங்கா மேம்பாட்டுப் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.
முன்னதாக, ஆரணி டவுன் பகுதிக்கு வந்த கலெக்டர் திடீரென தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் கூறுகையில், தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், இருக்கைகள், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.
மேலும், தாலுகா அலுவலகம் முழுவதும் குப்பை சூழ்ந்து சுகாதார மற்ற நிலையில் இருந்து வருகிறது. அதனால், தாலுகா அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து, கலெக்டர் ஆணையாளரை தொடர்பு கொண்டு தாலுகா அலுவலகத்தில் தூய்மை பணிகள் மேற்கொண்டு, சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு உத்தவிட்டார்.
மேலும், அடிப்படை வசதிகளான குடிநீர், இருக்கை, கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்ததவும் தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
அப்போது, ஆர்டிஓ தனலட்சுமி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர் ராஜகணபதி, தாசில்தார் ஜெகதீசன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சுரேஷ்குமார், உதவி செயற்பொறியளர் கோவேந்தன், பிடிஓக்கள் பிரபாகரன், திலகவதி, சவிதா, உதவி பொறியாளர் மதுசூதனன், சரவணன், சிவக்குமார், சரவணன், பணிமேற்பார்வையாளர் அண்ணாதுரை உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆரணியில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ்
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள், 150-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பயிற்சி படிப்புகளில் ஏழை மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது.
ஆரணியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் இடையே தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி கணினி வழி மூலம் நடைபெறுகிறது.
இப்பயிற்சி பெறும் மாணவர்களிடத்தில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்து அவர்களுடைய திறன்களை, கேள்விகள் எழுப்பி தெரிந்து கொண்டார்.
அப்போது கல்லூரி முதல்வர் என்.திருநாவுக்கரசு, துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம் மற்றும் துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu