/* */

அப்பநல்லூர் ஊராட்சியில் துணைத்தலைவர் அதிகாரம் பறிப்பு

பெரும்பான்மை இல்லையென இணை கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக அப்பநல்லூர் ஊராட்சி துணைத்தலைவர் துணை கலெக்டரிடம் மனு

HIGHLIGHTS

அப்பநல்லூர் ஊராட்சியில் துணைத்தலைவர் அதிகாரம் பறிப்பு
X

கூடுதல் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அப்பநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்தார்த்தன் , மற்றும் உறுப்பினர்கள்

மேற்கு ஆரணி ஒன்றியம் அப்பநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்தார்த்தன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அப்பநல்லூர் ஊராட்சி நிர்வாகத்தில் நிர்வாக ரீதியாக எந்த குற்றச்சாட்டு இல்லாமலும், எந்தவிதமான நிதிமுறைகேடு, நிதி இழப்பு போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் நேர்மையான முறையில் என்னுடைய பணியை செய்து வருகிறேன்.

ஆனால் துணைத்தலைவருக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி எனக்கு இணை கையொப்பம் இடும் அதிகாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஊராட்சி மன்றத்தில் எந்தவிதமான தீர்மானமும் இல்லாமல் கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டு உள்ளது.

இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டால் எந்தவிதமான பதிலையும் எழுத்துப்பூர்வமாக என்னிடம் வழங்கவில்லை.

மேலும் மன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையை நிருபிக்க நான் தயாராக உள்ளேன். எனவே இந்த மனு மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே துணைத்தலைவராகிய எனக்கு மீண்டும் காசோலை மற்றும் ஊராட்சியின் பதிவேடுகளில் இணை கையொப்பம் இடும் வாய்ப்பை மீண்டும் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்

Updated On: 8 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...