ஆரணி அருகே வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கைக்குழந்தை உயிரிழப்பு

ஆரணி அருகே வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கைக்குழந்தை உயிரிழப்பு
X
ஆரணி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 8 மாத குழந்தை உயிரிழந்தது. 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆரணி அருகே கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேனின் பின் பக்கம் டயர் வெடித்து விபத்துகுள்ளானதில் 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், 20 போ் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, துந்தரீகம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மாதா மாதம் பாண்டிச்சேரியில் உள்ள பிரித்திரிங்கா தேவி அம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியிலிருந்து சுமார் 24 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாண்டிச்சேரி பிரித்திரிங்க தேவியம்மன் ஆலயத்திற்கு டூரிஸ்ட் வேனில் சென்றுள்ளனர். அருணகிரிசத்திரம், சிவசக்தி நகா் பகுதியை சேர்ந்த டிரைவர் முரளி வேனை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் ஆரணி விழுப்புரம் நெடுஞ்சாலை விண்ணமங்கலம் கூட்ரோடு அருகில் சென்ற போது திடீரென வேனின் பின் பக்கம் டயர் வெடித்து விபத்துகுள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்த நடராஜன்-அமுதவள்ளி தம்பதியினரின் 8 மாத குழந்தை ஹேமேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும், நடராஜன், அவரது மனைவி அமுதவல்லி, மகள் ஆஷிகா மற்றும் நடராஜனின் சகோதரா் பாபு, அவரது மனைவி தமிழ்ச்செல்வி, சிவசக்தி நகா் பகுதியைச் சோ்ந்த பேபி, முத்துகிருஷ்ணன் மனைவி செல்வி, ஹரிகிருஷ்ணன் மனைவி செல்வி, சித்ரா, செல்வராஜ் மகன் நவீன் , தீனதயாளன் மனைவி மகேஸ்வரி, முருகன் மனைவி விஜயலட்சுமி, பெருமாள் மனைவி லட்சுமி, கோடீஸ்வரன் மனைவி சாந்தி, அன்பழகன் மனைவி சாந்தி, ஓட்டுநா் முரளி உள்ளிட்ட 20 போ் காயமடைந்தனா்.

இவா்களை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இவா்களில், 5 போ் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி அருகே கோவிலுக்கு சென்ற பக்தா்ககளின் வேன் டயர் வெடித்து 8மாத குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!