அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில உரையாடல் நிகழ்ச்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில உரையாடல் நிகழ்ச்சி
X

 மாவட்ட கல்வி அலுவலர்கள் நளினி, அரவிந்தன், தயாளன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

ஆரணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கல்வி மாவட்டத்தில் உள்ள ஆரணி, மேற்கு ஆரணி, தெள்ளார், பெரணமல்லூர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 410 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 52 ஆயிரத்து 849 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களில் 17 ஆயிரத்து 541 மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வி பயில்கின்றனர்.

இவர்களின் ஆங்கில திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் ஜி.சந்தோஷ், ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில உரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் நளினி, அரவிந்தன், தயாளன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

இதேபோல ஒன்றியத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் துரையரசன், கமலக்கண்ணன், சாவித்திரி, அருணகிரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாமரைச்செல்வி, பெருமாள், நந்தினி, வசந்தா, கேசவன், மகேஸ்வரி உள்பட அனைவருக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!