மேற்கு ஆரணி வளர்ச்சிக்காக ஒன்றியக்குழு கூட்டத்தில் 42 லட்சம் ஒதுக்கீடு

மேற்கு ஆரணி வளர்ச்சிக்காக ஒன்றியக்குழு கூட்டத்தில் 42 லட்சம் ஒதுக்கீடு
X

மேற்கு ஆரணி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றிய குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவர் வேலாயுதம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரின் பகுதிக்கும் பக்க கால்வாய் கட்டுதல், சிறு பாலம், நெல் களம் அமைத்தல், சாலைகள் சீர் செய்து சாலைகள் அமைத்தல், புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக பொது நிதியிலிருந்து ரூபாய் 42 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
smart agriculture iot ai