ஆரணியில் 85 பேருந்துகளில் ஏர்ஹாரன் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி
ஆரணி பஸ் நிலையத்தில் பஸ்களில் ஏர்ஹாரன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதியில் உள்ள சுமார் 206 தனியார் மற்றும் அரசு பஸ்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதாக புகார் வந்தது.
ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் வட்டார போக்குவரத்து ஊழியர்கள் ஆரணி பழைய பஸ் நிலையத்தில் இன்று அனைத்து பஸ்களிலும் ஆய்வு செய்தனர். விதிகளுக்கு புறம்பாக அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தியது தெரியவந்தது. அவற்றை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 85 பஸ்களில் உள்ள ஏர்ஹாரன் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து இதே போன்று ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் கணினி நிறுவன வாகனத்திற்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu