ஆரணி அருகே அதிமுக பொதுக்கூட்டம்
அதிமுக கூட்டத்தில் பேசிய சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுகூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலா் எல்.ஜெயசுதா, தலைமைக் கழக பேச்சாளா்கள் விஜி ராமதாஸ், போஸ் என்கிற அருணாசலம் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு 3 சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
சலவைத் தொழிலாளா்கள் 2 பேருக்கு சலவைப் பெட்டியும், சவரத் தொழிலாளா்கள் 2 பேருக்கு அதற்கான உபகரணப் பொருள்கள், 600 பேருக்கு டிபன் பாக்ஸ் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறிய முன்னாள் அமைச்சர்;
கூட்டத்தில் பங்கேற்ற சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, தன்னை இருட்டடிப்பு செய்யும் வகையில் கட்சி நிா்வாகிகள் சிலா் செயல்படுவதாகக் கூறி, கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினாா்.
எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
அதிமுக பொதுசெயலாளர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாட வலியுறுத்தினார். அதனால் மாவட்டம் சார்பாக நடைபெற்று வருகின்றன.
கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் வைத்த விளம்பரம் மற்றும் செய்தித்தாள் துண்டு பிரசுரம் ஆகியவற்றில் என் படத்தை போடாமல் என்னை புறக்கணித்து வருகின்றனர்.
ஐந்து மாதம் முன்பு நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் ஆரணியில் உள்ள சில நிர்வாகிகளை அழைத்து என் படத்தை போடக்கூடாது என்று கூறியுள்ளதாக சிலர் என்னிடம் கூறினர். அவ்வாறு அவர் கூறினாரா என்பதை நீங்கள் தான் விசாரித்து என்னிடம் தெரிவிக்க வேண்டும்
அதையும் மீறி சில நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் எனது படத்தை போட்டுள்ளனர்.
2 முறை எம்.எல்.ஏவாக உள்ள நான் மக்கள் மன்றத்தில் இந்த நிலைப்பாட்டை எடுத்து வைக்கின்றேன். மக்களே தீர்ப்பு அளியுங்கள் எந்த இழப்பு வந்தாலும் உங்களை விட்டு பிரியமாட்டேன் நான் அதிமுகவில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன். 5 வருடம் இந்து சமய அறநிலை துறை அமைச்சராகவும் 2 முறை எம்.எல். ஏவாகவும் 3 முறை உள்ளாட்சி பிரதிநிதியாக இருந்து மக்களுக்காக பணியாற்றி வருகின்றேன்.
17லட்சம் தொண்டர் கொண்ட இந்த இயக்கத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1கோடி 50லட்சம் தொண்டர்கள் உருவாக்கியதை எடப்பாடி பழனிசாமி 2கோடி 40லட்சம் தொண்டர்கள் உருவாக்கிய வரும் அப்படிபட்ட இயக்கத்தில் என்னை வேண்டுமென்றே புறக்கணித்து வரும் மாவட்ட செயலாளரை கண்டிக்கிறேன் என பேசி மேடையில் இருந்து உடனடியாக முன்னாள் அமைச்சர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் இறங்கி சென்றார்.
அவருடன் அவரது ஆதரவாளர்கள் எம்எல்ஏ வாழ்க என்று கூறி எம் எல் ஏ உடன் சென்றனர்.
இச்சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி தொண்டர்கள் மத்தியிலும் கட்சி நிர்வாகிகள் இடத்திலும் நாடாளுமன்ற தேர்தல் வரக் கூடிய நிலையில் இது தேவையா என சோகத்தில் ஆழ்ந்தனர்.
உடனடியாக தலைமை தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu