தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம்..!

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம்..!

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட செயலாளர் ஜெயசுதா மற்றும் சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்த 65 குடும்பங்களுக்ககும் நீதி வேண்டியும், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமையில் துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். மேலும் ஆரணி டவுன் மார்க்கெட் ரோடு காந்தி சாலை, அண்ணா சாலை வரை ஊர்வலமாக சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதனை தொடர்ந்து இரும்பேடு மற்றும் பையூர் ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் தலைமையில் தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து பிரசுங்களை பொது மக்களிடம் வழங்கினர்.

இதில் மா வட்ட ஜெ.பேரவை செயலாளர் பாரிபாபு, மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் அரையாளம் வேலு, மாவட்ட இணைசெயலாளர் வனிதா சதிஷ், ஒன்றிய செயலாளர்கள், வக்கீல் சங்கர், திருமால், ஜெயபிரகாஷ் நகர செயலாளர் அசோக் குமார், நகர மன்ற உறுப்பினர்கள் சுதா குமார், பானுப்ரியா பாரதிராஜா, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் இ.பி.நகர் குமார் புங்கம்பாடி சுரேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

போளூர்

திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் தொகுதிக்குட்பட்ட போளூர் பேரூராட்சியில் அதிமுக சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் கஞ்சா போதை பொருள் மற்றும் கள்ளச்சாராயம் தலைவிரித்து ஆடுவதை கண்டித்து, திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளரும் போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயசுதா லட்சுமி காந்தன், போளூர் பேரூராட்சியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரச்சாரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் , கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story