திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரச்சார வாகனம்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. பிரச்சார வாகனத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, செய்யாறு, போளூா், செங்கம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு பிரசார வாகனத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆரணி
மதுரையில் வருகிற ஆக. 20 ஆம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலா் எடப்பாடி பழநிசாமி தலைமையில் நடைபெறவுள்ள அ.தி.மு.க .எழுச்சி மாநாடு குறித்த விழிப்புணா்வு வாகனம் ஆரணிக்கு வருகை தந்தது. இந்த பிரசார வாகனத்துக்கு ஆரணி தொகுதி எம்.எல்.ஏ. சேவூா் ராமச்சந்திரன், அ.தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் தூசி மோகன் ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன், வேலூா் மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஜனனி சதீஷ்குமாா், மாவட்ட பொருளாளா் கோவிந்தராசன், நகரச் செயலாளர் அசோக்குமாா், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பாபு, ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போளூா்
போளூா் பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க எழுச்சி மாநாடு பிரசார வாகனத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பிரசார வாகனத்தை எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்த வாகனம் போளூா் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதா, பொதுக்குழு உறுப்பினா் ராஜன், மாவட்ட துணைச் செயலா் செல்வன், நகரச் செயலா்கள் பாண்டுரங்கன் (போளூா்), பஞ்சாட்சரம் (களம்பூா்), ஒன்றியச் மற்றும் அதிமுகவினா் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை
பிரசார வாகனம் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு இன்று மாலை வந்தது. இதற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் மற்றும் நகர அ.தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம் வரவேற்றார்.
இந்த வாகனம் முக்கிய வீதிகள் வழியாக வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் நோக்கி சென்றது. பிரசார வாகனத்தின் முன்பு மோட்டார் சைக்கிளில் அணிவகுத்தபடி அ.தி.மு.க.வினர் கட்சி கொடியை ஏந்தியபடி சென்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குணேசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், வழக்கறிஞர் பிரிவு சஞ்சீவிராமன், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் போர்மன்னன்ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu