திருவண்ணாமலை ஆரணி அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்த திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர்
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் 20 ஆம் தேதி தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, வரும் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 30ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்கள் வாபஸ் பெற அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்..
திருவண்ணாமலை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக கலெக்டர் பாஸ்கரபாண்டியனும், ஆரணி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக டிஆர்ஓ பிரியதர்ஷினியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 12 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, ஆரணி தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் வேட்பு மனு தாக்கல் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று அனைத்து கட்சி பிரமுகர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் கேட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று கட்ட பாதுகாப்பு மாவட்ட காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மக்களவை தொகுதி
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர் பாண்டியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவருடன் மாவட்ட செயலாளர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி , ராமச்சந்திரன் தேமுதிக மாவட்ட செயலாளர் நேரு கலந்து கொண்டனர்.
முன்னதாக திருவண்ணாமலை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் , வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு மாவட்ட செயலாளர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வாழ்த்து பெற்றார்.
அப்போது திருவண்ணாமலை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன் ,திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள்,அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.
ஆரணி மக்களவை தொகுதி
அதேபோல் ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் கழக நிர்வாகிகளுடன் வருவாய் கோட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன், மாவட்ட கழக செயலாளர்கள் தூசி மோகன், ஜெயசுதா, தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu