பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்: சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்:  சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
X

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்த சேவூர் ராமச்சந்திரன்

புங்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை ஆரணி எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியம் புங்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 9 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , ஊராட்சி தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!