பேரிடர் மீட்பு பணி குறித்து தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம்
பெரிய ஏரியில் பருவ மழை மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் செய்து காட்டினர்.
தற்போது பருவ மழை தொடங்கி விட்டதால் பல இடங்களில் கனமழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி ஆரணியை அடுத்த காமக்கூர் பெரிய ஏரி பகுதியில் பருவ மழை தொடங்கி விட்டதால் நீர் நிலைகளில் வெள்ளஅபாய நிலையில் இருந்தும், பேரிடர்பாடுகளில் இருந்தும் பொதுமக்களை எவ்வாறு காப்பது குறித்து தீயணைப்பு துறையினர் மாதிரி செயல் விளக்கம் நடத்தினர்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆரணி தாசில்தார் ஜெகதீசன் வரவேற்றார். ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் படைவீரர்களால் பிளாஸ்டிக் காலி டப்பாக்களை கொண்டும் நீர்நிலைப் பகுதிகளில் தத்தளிப்பவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார். கையில் உள்ள பொருட்களைக் கொண்டு மீட்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் குப்பு சங்கர், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி கோபு, இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் பாபு, தாசில்தார் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu