கிரிவலம் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது விபத்து: 2 பேர் உயிரிழப்பு

கிரிவலம் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது விபத்து: 2 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்

கண்ணமங்கலம் அருகே கார்-வேன் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 போ் காயம் அடைந்தனர்.

கண்ணமங்கலம் அருகே கார்-வேன் மோதிக்கொண்டதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 போ் காயம் அடைந்தனர்.

ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி அருகே உள்ள கொரலாம்பேட்டா பகுதியை சேர்ந்த வெங்கட ரெட்டி, சேகர் ரெட்டி, மோனிகா மற்றும் மதுமிதா ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்ரா பெளர்ணமி கிரிவலம் செல்ல கார் மூலம் திருவண்ணாமலை வந்திருந்தனர்.

கிரிவலத்தை முடித்துவிட்டு நேற்று நள்ளிரவு வேலூர் வழியாக ஆந்திரா செல்ல திட்டமிட்டு காரில் புறப்பட்டுச் சென்றனர். காரை சேகர் ரெட்டி ஓட்டிச் சென்றார். கார், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த வேன் மீது மோதியது. இதில் சேகர் ரெட்டி, சூரிய சேகர் ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் காரில் வந்த மதுமிதா, மோனிகா மற்றும் வேனில் வந்த, வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியை பத்மாவதி , தினகரன் , அரிதாஸ் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜன், சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேனையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள மோனிகா மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!